இனி ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது கேள்விக்குறியாக உள்ளது..

2023 உலகக் கோப்பை போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த மெகா தொடரில் இந்திய அணி தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து கோப்பையை தவறவிட்டது.

இந்த போட்டியில் தோல்வியடைந்த பிறகு, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் விலகலாம் எனவும் கூறப்படுகிறது. தேர்வுக்குழு தலைவர்களான அஜித் அகர்கர் மற்றும் ரோஹித் சர்மா இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு அறிக்கையின்படி, ரோஹித் ஷர்மா ஏற்கனவே டி20 வடிவில் இருந்து தன்னை விலக்கி வைக்குமாறு தேர்வுக் குழுவிடம் கூறியுள்ளார். டி20 அணிக்கு தனது பெயர் பரிசீலிக்கப்படாவிட்டாலும், தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும் ரோஹித் தெளிவுபடுத்தியுள்ளார். இந்திய அணியின் அடுத்த கவனம் டி20 உலகக் கோப்பை 2024 போட்டியில் இருக்கும். இந்த போட்டிக்கான நடவடிக்கைகளை பிசிசிஐ தொடங்கியுள்ளது. இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. 

டி20 வடிவத்தில் ரோஹித் சர்மா விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே ரோஹித் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவாரா? என்பது குறித்தும் விவாதிக்கப்படலாம். ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவதில்லை என முடிவு செய்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தி வருவார். விரைவில் முடிவு எடுக்கப்படும். 

 டைம்ஸ் ஆஃப் இந்தியா, ‘இப்போது ரோஹித் ஷர்மா 2025 ஆம் ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கவனம் செலுத்துவதைக் காணலாம். இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான புதிய தொடக்க வீரரை உருவாக்க விரும்புகிறது. ஹர்திக் பாண்டியா காயமடைந்தார். எனவே தேர்வாளர்கள் இப்போது புதிய வீரர்களை தேடப் போகிறார்கள்.’ 2024 டி20 உலக கோப்பைக்கு முன் காயத்தால் அவதிப்படும் ஹர்திக் டி20 அணிக்கு கேப்டனாக இருப்பாரா என தெரியவில்லை.

ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக ஐசிசி கோப்பையை கூட வென்றதில்லை. உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன், அவர் தலைமையில் இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றது. அவரது தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இப்போது உலகக் கோப்பையை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.