
10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று மாமல்லபுரத்தில் இருக்கும் தனியார் மண்டபத்தில் கல்வி விருது வழங்கும் விழா நடத்தினார்.
இந்த விழாவில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு விஜய் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார். மாணவர்களின் பெற்றோர்களும் மேடையிலேயே விஜயை பாராட்டி பேசினர். அதில் ஒரு மாணவரின் தந்தை கல்விக்கு இவ்வளவு பெரிய தொண்டு செய்வதால் இன்றிலிருந்து விஜய் இளைய காமராஜர் என்று அழைக்கப்பட வேண்டும் என கூறினார்.
இதனை கேட்டதும் ஷாக்கான விஜய் அந்த நபரின் தோளில் கை வைத்தபடியே சிரித்தார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரல் ஆனது. இது பற்றி பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் இளைய காமராஜரா? காமராஜர் 50 திரைப்படங்களில் நடித்துவிட்டு அரசியலுக்கு வரவில்லை என விமர்சித்துள்ளார்.