திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குட்டிய பட்டியில் 38 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் அதிமுக பொருளாளரும், எம்எல்ஏவுமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காமராஜருடன் மோடியை ஒப்பிட்டு அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.

காமராஜர் யார் மற்றவர்கள் யார் ,காமராஜர் எப்படிப்பட்டவர், மற்றவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பொதுமக்களுக்கு நன்றாக தெரியும். இது குறித்து நான் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.