தமிழகத்தில் 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் விதமாக தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது திமுக கட்சியின் எம்பி திருச்சி சிவா தமிழக மக்களால் நேர்மை மற்றும் எளிமையின் நாயகனாக கர்மவீரர் காமராஜர் போற்றப்படுகிறார். ஆனால் தன்னால் ஏசி இல்லாமல் தூங்க முடியாது என காமராஜர் கருணாநிதியிடம் கூறியதாகவும் அதனை கருணாநிதி தன்னிடம் கூறியதாகவும் அவர் சொன்னார்.
அவருடைய இந்த பேச்சுக்கு தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரபல புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், காமராஜர் பற்றி பேசுவதற்கு திருச்சி சிவாவுக்கு எந்த தகுதியும் கிடையாது. ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். மேலும் அதை விட்டு விடுங்கள் என்று கூறினார்.
