பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமூக ஊடகமான ரெடிட் (Reddit) மூலம் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு அதிர்ச்சிகர அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ஸ்டார்பக்ஸ் காபி, மென்மையான பேச்சு, மரியாதையுடன் நடந்துகொண்ட ஒருவன் என ஆரம்பமான அந்தச் சந்திப்பு, பிறகு அவமானகரமான தருணமாக மாறியதாகவும், இது சமூக வலைதளங்களில் சோகத்துடன் கலந்த சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் கூறுகையில், அவர் ஒரு ஸ்கர்ட் மற்றும் ஸ்லீவ் உள்ள டாப் அணிந்திருந்த போது, “கோரமங்கலா டெக்-கை சாப்ட்பாய்” மாதிரி தோற்றமுள்ள ஒருவன் அவர் அருகே வந்து நட்பாக உரையாட ஆரம்பித்தான்.
சிட்டி வாழ்க்கை, பிடித்த கஃபே குறித்த உரையாடலுக்குப் பிறகு, அந்த வாலிபர் அவருக்கு ஸ்டார்பக்ஸ் காபி வாங்கித் தர விருப்பம் தெரிவித்தார். தயக்கத்துடன் அந்தப் பெண் உடன்பட்டார். ஆனால், சுமார் 15-20 நிமிட உரையாடலுக்குப் பிறகு, அந்த வாலிபர் மெதுவாக அருகில் வந்து, “இது கொஞ்சம் விநோதமா இருக்கலாம்… ஆனா உங்களால ஒரு உதவி செய்ய முடியுமா?” என கேட்டார். அதற்கு பதிலளித்த அந்த பெண், “எவ்வளவுதான் வித்தியாசமா இருக்கப்போகுது?” என்று கேட்க, அவர் தனது காபி கப்பை திறந்து வைத்தபடி, மிகவும் ஸீரியஸாக, “நீங்க இந்த காபில எச்சில் துப்ப முடியுமா?” என கேட்டார்.
இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், “நீங்க என்ன சொன்னீங்க? எச்சில் துப்ப முடியுமா?” என இருமுறை உறுதி செய்து கேட்டதாக பதிவு செய்துள்ளார். உடனே அங்கிருந்து எழுந்து செல்ல முயன்றபோது, அந்த வாலிபர் “ரூ.1,000 தர்றேன்… நீங்க செய்யுறீங்களா?” என கூறியுள்ளார். மிகவும் கோபத்துடனும் அதிர்ச்சியுடனும் அந்த பெண் அருகிலிருந்த மெட்ரோ ஸ்டேஷனை நோக்கி ஓடிச் சென்றதாகவும் கூறியுள்ளார். இந்த அதிர்ச்சிகர சம்பவத்தை அவர் பின்னர் ஹ்யூமருடன் கூறியபோது, “நான் வாழ்க்கையிலே எளிமையான ரூ.1,000 தவறவிட்டேனா?” என கேட்டுள்ளார். தற்போது இந்த சம்பவம் இணையத்தில் பரவலாக பரவி வருகின்றது.
