டெல்லி பல்கலைக்கழகம் தற்போது காதல் உறவுகள் மற்றும் அதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஒரு புதிய பாடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது காதல் உறவுகள், காதல் தோல்விகள் மற்றும் அதில் உள்ள பிரச்சினைகள் குறித்து மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக “Negotiating intimate relationships”என்ற புதிய பாடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பாடத்தை டெல்லி பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் சமூகத்தில் காதல் தோல்விகள், கள்ளக்காதல் உறவுகள் மற்றும் அதனால் ஏற்படும் வன்கொடுமைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த பாடம் அன்பு மற்றும் நட்பை உருவாக்குதல் அதன் பிறகு ஆரோக்கியமான பிணைப்பை உண்டாக்குதல் உள்ளிட்ட பல பாச பிணைப்புகளையும் வெளிக்காட்டும். இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு செல்வதால் மாணவர்களின் சுதந்திரம் என்பது அவர்களை தவறான பாதைக்கு சில சமயங்களில் அழைத்து செல்கிறது என்பதால் அவர்களை இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இப்படி ஒரு பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த பாடத்திட்டத்தின்படி ஒவ்வொரு வாரமும் மூன்று விரிவுரைகள் மற்றும் ஒரு பயிற்சி வகுப்பில் மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.