
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் தன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் மனதாக்கல் செய்தார். அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கில் மனுதாரருக்கு 20 வயது ஆகிறது. அவரும் 19 வயது இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் சந்தித்தபோது இரவு வெகு நேரம் பேசி இருக்கின்றனர். அப்போது மனுதாரர் இளம்பெண்ணை கட்டி பிடித்து முத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இளம்பெண்ணை மனுதாரர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறி அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காதலிப்பவர் கட்டிப் பிடிப்பது, முத்தமிடுவது இயல்பானதாகவே பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டாம் என காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறையினர் விசாரணை முடித்து ஸ்ரீவைகுண்டம் நிதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கையும் கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கையும் ரத்து செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.