
பீகார் மாநிலம் பாட்னாவில் 17 வயது சிறுமி அனாமிகா என்பவர் பயிற்சி வகுப்புக்கு சென்று கொண்டிருந்தபோது பட்டப் பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் இந்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. அதில் நடந்து வந்து கொண்டிருந்த சிறுமியை இளைஞர் ஒருவர் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்.
Law and Order situations in Bihar is abysmally low….👇#Bihar: 17 year old girl going to coaching shot dead in Patna's Masaurhi.#Bihar #Patna #Masaurhi #girl #student #coaching #shotdead
— Oxomiya Jiyori 🇮🇳(Modi’s Family) (@SouleFacts) December 12, 2023
அவரைப் பார்த்ததும் அங்கிருந்து தப்பு முயன்ற சிறுமியை விரட்டி சென்று அந்த இளைஞர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். சிறுமியை அவர் காதலித்ததாகவும் சிறுமி காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.