சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் தனியார் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படிக்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தை சேர்ந்த ரிஷிகேஷ் என்ற மாணவர் எம்.பி.பி.எஸ் படித்து கொண்டிருக்கிறார். இவருக்கு 18 வயது தான் ஆகிறது. கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த ரிஷிகேஷ் நேற்று முன்தினம் கல்லூரி விடுதியில் இருக்கும் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரிஷிகேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனது சொந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை ரிஷிகேஷ் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் கடந்த சில நாட்களாக ரிஷிகேசுடன் பேசவில்லை. ரிஷிகேஷ் தனது காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உள்ளார். ஆனாலும் அந்த பெண் அவரிடம் பேசவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ரிஷிகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.