பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா மாவட்டத்தில் ஹயாகாட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிலாஸ்பூர் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது இந்த கிராமத்தில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணும் வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் அந்த காதலை கடுமையாக எதிர்த்தனர்.

இதன் காரணமாக காதலர்கள் இருவரும் கடந்த 1ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கடந்த 3ஆம் தேதி அவர்களைத் தேடி கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். அதன்பிறகு மிகவும் கோபம் கொண்ட பெண்ணின் குடும்பத்தினர் அந்த வாலிபரை பிடித்து தலையின் மொட்டை அடித்து முகத்தில் கருப்பு மை பூசி தாக்கினார்.

 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  வரும் நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோவை வைத்து தார்பங்கா சதார் எஸ்.பி ராஜூவ் குமார் வீடியோவில் உள்ள இளைஞனை அடையாளம் கண்டுபிடித்து பெண்ணின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அந்த பெண்ணின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களையும் கைது செய்ய போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணும் இளைஞனும் தற்போது போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சட்டப்படி இருவரும் வயது வந்தவர்கள் என்பதால் அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.