ஹைதராபாத்தில் சீனிவாஸ் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் ரம்யா (23). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், பிரவீன் குமார் (25) என்பவரை காதலித்து வந்தார். இதில் பிரவீன் குமார் பி டெக் முடித்த நிலையில் அந்தப் பகுதியில் மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வந்தார். அப்போது ரம்யாவுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம் பிரதீப் ரம்யா வீட்டிற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் காதலுக்கு ரம்யாவின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு ரம்யாவுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவர்கள் மாப்பிள்ளையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று ரம்யாவின் வீட்டில் அவரது பெற்றோர் இல்லை என்பதை அறிந்த பிரதீப் அங்கு சென்று ரம்யாவிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். அதற்கு ரம்யா தன் காதலனிடம் படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பிரதீப் ரம்யாவின் கழுத்தை அறுத்து தலையை துண்டித்தார். பின்னர் அதே கத்தியால் தன்னுடைய கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் அங்கிருந்தவர்கள் பிரதீப்பை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரதீப்புக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் காதலிக்கும் போது இனிக்கிறது அதுவே கல்யாணம் என்றால் கசக்கிறதா என்று தகராறு செய்து பிரதீப் காதலியை கொலை செய்துவிட்டதாக முதற்கட்ட தகவல் வெளிவந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.