புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி வரும் நிலையில், தற்போது காதலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதுச்சேரி அருகே உள்ள ஒரு ஒதுக்குப்புறமான கடற்கரை பகுதிக்குச் சென்ற காதலர்களை, அங்கு வந்த ஒரு இளைஞர் கும்பல் சுற்றி வளைத்துள்ளது.

காதலனை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கிய அந்த கும்பல், அவர் கண்ணெதிரிலேயே இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளது.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உதவிக்கு யாரும் வராத நிலையில், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. படுகாயமடைந்த இளைஞர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களை வைத்து 5 பேர் கொண்ட அந்த கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.