கேரள மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கேரளாவில் தனியார் மருத்துவமனைக்கு வயிற்று வலி என்று கூறி வந்த ஒரு பெண், குழந்தை பெற்ற அதற்கான அறிகுறி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து உள்ளனர். உடனே இது குறித்து அந்த பெண்ணிடம் விசாரித்ததில், கல்லூரியில் படித்த போது காதலித்த தாமஸ் ஜோசப் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் நெருங்கி பழகியதால் குழந்தை பிறந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் தாமஸ் ஜோசப் நண்பருடன் சேர்ந்து பச்சிளம் குழந்தையை மண்ணுக்குள் புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலனுடன் சேர்ந்து பிறந்த குழந்தையை பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.