சென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் கடந்த 24ஆம் தேதி மாலை நேரத்தில் தன்னுடைய தோழியின் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக சென்று விட்டு வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். ஆனால் அதன் பிறகு திரும்பி வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர். சிறுமியின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்வதில் வீனஸ் நகரில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக காவல்துறையினர் அங்கு சென்று நிலையில் அவர்கள் பார்த்த காட்சி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதாவது சிறுமி காதலனுடன் தனிமையில் இருந்துள்ளார். இதேபோன்று இன்னும் 2 சிறுமிகள் அவர்கள் காதலனுடன் தனிமையில் இருந்துள்ளனர். உடனடியாக சிறுமிகள் மூவரையும் காவல்துறையினர் மீட்டர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்த நிலையில் சிறுவர்கள் உட்பட மூவரை கைது செய்தனர். இதில் கைதான கரி முல்லா மீது 11 வழக்குகள் இருக்கிறது. அதன் பிறகு அபிஷேக் மீது 6 வழக்குகளும் கைது செய்யப்பட்ட ஒரு 16 வயது சிறுவன் மீது 6 வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது. மேலும் சென்னையில் 3 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது