மத்திய அரசால் 2019 ஆம் வருடம் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குழாய் மூலமாக குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டமானது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் தேவைக்கு ஏற்ப குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்க மத்திய அரசு, ‘ஜல் ஜீவன்’ திட்டத்தை கொண்டு வந்தது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற வீடுகளுக்கு இத்திட்டத்தின் கீழ், 100% குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்ட ஆட்சியர் ஆர்த்திக்கு, ‘பிரதமர் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21ஆம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில், ஆட்சியருக்கு விருது வழங்கப்பட உள்ளது.