தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் தனி கட்சி தொடங்கிய நிலையில் சமீபத்தில் கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணி ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. அதாவது விஜய தரணி காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வகித்தபோது டெல்லியில் வைத்து நடிகர் விஜயிடம் தனி கட்சி தொடங்க வேண்டும் என ராகுல் காந்தி கூறினாராம்.

அதாவது நடிகர் விஜய் ராகுல் காந்தியை நேரில் சென்று சந்தித்தாராம். அப்போது காங்கிரஸில் தனக்கு ஒரு பொறுப்பு வேண்டும் என விஜய் கேட்டுள்ளார். அதற்கு ராகுல் காந்தி உங்களுக்கு இருக்கும் அதிகாரத்திற்கு நீங்கள் தனி கட்சியை தொடங்கலாம் என்று கூறினாராம். அவர் கொடுத்த ஐடியாவின் பெயரில் தான் நடிகர் விஜய் தனியாக கட்சி தொடங்கியதாக கூறியுள்ளார். மேலும் விஜய்யின் கட்சி காங்கிரஸ் உடன் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் சொன்ன இந்த தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு தவெகவினர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.