தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை ஆனை விழுந்தான் குள தெருவில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில மாணவர் அணி பொதுச் செயலாளராக இருக்கிறார். நேற்று இரவு ஒரு மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஸ்ரீகாந்தின் வீட்டை நோக்கி பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டிலை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனால் வீட்டுக் கதவில் இருந்த திரை சேலை எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.