
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரபலமான Third Wave காபி ஷாப் செயல்பட்டு வருகிறது. இதன் கிளைகள் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த காபி ஷாப் நிறுவனத்தின் ஒரு கிளையில் தற்போது பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நிறுவனத்தில் ஒரு கிளையில் உள்ள கழிவறையில் குப்பை தொட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில் ரகசிய கேமரா ஒன்று இருந்தது. இதனை அங்கு சென்ற பெண் கஸ்டமர் ஒருவர் பார்த்துள்ளார்.
அதிலிருந்த செல் போன் ஏரோபிளேன் மோடில் இருந்த நிலையில் சுமார் 2 மணி நேரமாக அங்கு நடந்த நிகழ்வுகளை படம் பிடித்துள்ளது. இது தொடர்பாக அந்த பெண் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அங்கு வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரின் செல்போன் என்பது அது தெரிய வந்ததால் அவரை அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது. அதோடு அவர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Reminder that women are not safe ANYWHERE 🙂🙂🙂 pic.twitter.com/ha4KtztL0w
— Shasvathi Siva (@shasvathi) August 10, 2024