உத்தரப்பிரதேசம் மாநிலம் மொராதாபாத் என்ற மாவட்டத்தில் இன்று காலை தனியார் மருத்துவமனையின் கழிவறையில் பிறந்த குழந்தை ஒன்று உயிருடன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவமனையின் கழிவறையில் பிளஸ் பாக்ஸ் மீது வைக்கப்பட்டிருந்த அந்த குழந்தை மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து குழந்தையை வீசி சென்றது யார் என்று விசாரணையை நடத்தி வருகிறார்கள். அந்த குழந்தைக்கு தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது