
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 65 பேர் பலியான விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி வந்த நிலையில் பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் தமிழக அரசு இதில் முறையான விசாரணை நடத்தவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிஐக்கு விசாரணையை மாற்றி உத்தரவிட்டது. மேலும் கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 65 பேர் பலியான நிலையில் தற்போது விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.