
சேலம் மாவட்டத்தில் உள்ள தொட்டம்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாந்தி (35) என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் சாந்தி கடந்த மார்ச் மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஜெய்சங்கர் சின்ன பொண்ணு என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதில் சின்னபொண்ணுக்கு திருமணமாகி 5 மகள்கள் மற்றும் 1 மகன் இருகிறார்கள்.
இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததோடு பல இடங்களுக்கும் சென்று வந்துள்ளனர். இது தொடர்பாக சாந்திக்கு தெரிய வரவே அவர் தன் மகன்களை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் ஜெய்சங்கர் கள்ள காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை தன் மனைவியின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சாந்தி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ஜெய்சங்கர் மற்றும் சின்ன பொண்ணுவை காவல்துறையினர் வலைவீசி தேடிவந்த நிலையில் அவர்கள் இருவரையும் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.