சென்னை வேப்பேரி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழிலதிபர் மனைவிக்கும், அதே குடியிருப்பில் புதிதாகக் குடியேறிய திலிப் என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். அந்த மோகத்தில், திலிப் கேட்டபோதெல்லாம் சுமார் ஒரு கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள், 2.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் என பெரும் சொத்தை அந்தப் பெண் அவரிடம் வாரிக் கொடுத்துள்ளார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தத் தொடர்பை பெண் துண்டிக்க முயன்றபோது, திலிப் தனது சுயரூபத்தைக் காட்டியுள்ளார். தன்னிடம் உள்ள ஆபாசப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி, அந்தப் பெண்ணை மனரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளார். இந்த மிரட்டல்களுக்குப் பயந்து மனமுடைந்த அந்தப் பெண், வேறு வழியின்றி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தலைமறைவாக உள்ள திலிப்பை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
