
சென்னை வடபழனி காவல் நிலையத்திற்கு நள்ளிரவு ஒரு மணிக்கு 35 வயதுடைய பெண் வந்தார். அந்த பெண் போதையில் எனது ஆண் நண்பர் என்னுடன் நெருங்கி பழகினார். இப்போது என்னை கல்யாணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். போலீசார் ரோந்து பணி சென்றதால் பெண் போலீஸ் ஆர்த்தி மட்டுமே காவல் நிலையத்தில் இருந்தார். அவர் பெண்ணிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கும்படி கூறினார். ஆனால் அந்த பெண் திடீரென பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி எனக்கு நியாயம் வேண்டும். ஆண் நண்பரை உடனே திருமணம் செய்து வையுங்க எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
உடனே அருகில் இருப்பவர்கள் உதவியுடன் ஆர்த்தி அந்தப் பெண் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினார். இதனையடுத்து காவல் நிலையத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் அம்மு தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தீக்குளிக்க முயன்ற பெண் வடபழனி வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. நைட் கிளப் ஒன்றில் தற்சமயம் நடனமாடி வருகிறார். அந்த பெண்ணுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் அறிவழகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
அறிவழகனுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். புத்தாண்டு அன்று இருவரும் அமர்ந்து மது குடித்தனர். அந்த பெண் திருமணம் செய்யுமாறு கூறியதற்கு அறிவழகன் எனது மனைவியை விட்டு வர முடியாது என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த பெண் காவல் நிலையத்திற்கு வந்து தீக்குளிக்க என்றது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த பெண்ணின் கணவர் மற்றும் கள்ளக்காதலன் அறிவழகனை காவல் நிலையத்திற்கு வரவழைத்து இரு தரப்பிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அந்த பெண்ணை கணவருடன் பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.