
ஜெய்ப்பூரில் ஒரு பெண் தனது கணவரை தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்லால் சைனி என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கோபாலி தேவி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேவிக்கு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்க்கும் தீனதயால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த தன்லால் தனது மனைவியை கண்டித்தார். கடந்த 15-ஆம் தேதி தன்லால் ஒரு ஜவுளி கடைக்கு சென்றார்.
அப்போது தனது மனைவி தீன்தயாலுடன் நிற்பதை பார்த்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கோபமடைந்த தேவி தனது கள்ளக்காதலனுடன் இணைந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி தேவி தனது கணவரை கடையின் மேல் மாடியில் இருக்கும் அறைக்கு அழைத்து சென்று அவர் எதிர்பாராதநேரத்தில் இரும்பு கம்பியால் தாக்கினார். மேலும் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்து ஒரு சாக்கு பையில் உடலை மறைத்து இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் ஒரு காலி இடத்தில் வைத்து தன்லாலின் உடலை தீ வைத்து எரித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தேவி மற்றும் தீன்தயால் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
View this post on Instagram