பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் மாவட்டத்தில் ஒரு பகுதியில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த திருமண நிகழ்ச்சியின் போது ஒருவர் துப்பாக்கி எடுத்து மேலே சுட்டதில் அதன் சத்தம் கேட்டு பஞ்சாயத்து தலைவரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது திருமண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் சிலர் ஆடி பாடி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது மகிழ்ச்சி வெள்ளத்தில் ஒருவர் கைதுப்பாக்கியை எடுத்து மேலே நோக்கி சுட்டார்.

அவர் இரண்டு முறை துப்பாக்கியால் மேலே சுட்ட நிலையில் திடீரென பஞ்சாயத்து தலைவரின் கணவர் பரம்ஜித் சிங் கீழே விழுந்தார். அவர் தன் இரு கைகளையும் தூக்கி தன்னை தூக்குமாறு கூறுகிறார். அவரை அங்கிருந்தவர்கள் தூக்கிய நிலையில் திடீரென கீழே விழுந்து மாரடைப்பால் இறந்துவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் இது போன்று திருமண நிகழ்ச்சிகளில் துப்பாக்கியை பயன்படுத்துவது மிகவும் தவறு என்று கூறி வருகிறார்கள். மேலும் தவறுதலாக கொலை நடந்தது என்று கூறப்பட்டாலும் இது போன்ற சம்பவங்களுக்கு பத்து வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என ஏற்கனவே ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.