தென்னிந்திய சினிமாவில் வாழ்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை இலியானா. இவர் கேடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து வந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இதனிடையே சமீபத்தில் இலியானா தன் கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படத்துடன் வெளியேற்றி இருந்தார்.

இந்நிலையில் விரைவில் அம்மாவாக போகும் இலியானா தனது காதலன் குறித்து முதல்முறையாக பதில் அளித்துள்ளார். ஆதரவற்ற நிலையில் இருந்த போது தைரியமாக நின்று கண்ணீரை துடைத்தார், அவர் எனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்து என் பக்கத்தில் நின்றார், ஒரு தாயாக இருப்பது ஒரு மகிழ்ச்சியான உணர்வு. இவ்வளவு சந்தோசம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. குழந்தை பிறந்தது எப்படி பராமரிப்பது என தெரிய வில்லை என்று கூறியுள்ளார்.