
பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் கல்கி 2898 ஏடி. இந்தப் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், நடிகைகள் தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் கடந்த மாதம் 27-ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படம் ஆயிரம் கோடி வசூல் கிளப்பில் இணைந்து விட்டதாக படகுழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் அது தவறான கருத்து என ஹிந்தி விமர்சகர்கள் சிலர் கூறியிருந்தனர். இதன் காரணமாக தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரோகித் ஜெய்ஷ்வால் மற்றும் சுமித் கடேல் ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளனர். மேலும் அவர்கள் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு சரியான விளக்கம் கொடுக்க வேண்டும் இல்லை எனில் ரூ.25 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.