தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற இருவரை விண்ணப்பம் செய்யாத தகுதியுள்ள பயனாளிகள் இணைய சேவை மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே மகளிர் உரிமை தொகைக்கு இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்காக இணைய சேவை மையங்களில் வசதி செய்யப்படவுள்ளது. இந்த வசதியை வருகின்ற 18-ஆம் தேதி முதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதேசமயம் கைப்பேசி குறுஞ்செய்தி வந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் மேல்முறையீட்டு பரிசீலனையை ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.