பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த போது உலக தலைவர்கள் கொடுத்த பரிசு பொருட்களை விற்று சொத்து சேர்த்த குற்றத்திற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து இரவோடு இரவாக பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்னும் 90 நாட்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் பதவியில் இருந்து விலகும் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராஜா ரைஸ் அகமத் என இருவரும் இணைந்து பலூசிஸ்தான் எம்பியை பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளனர்.