
சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னதாக அஸ்வினை தக்கவைத்தது. அதன் பிறகு நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரவையும் ஏலத்தில் எடுத்தது.
இதைத்தொடர்ந்து தற்போது இந்திய வீரர் கலீல் அகமதுவை ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும் இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4.80 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.