
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா 2. இந்த படத்தின் விளம்பரத்திற்காக அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு சென்றுள்ளார். அங்கு அதிக கூட்டம் கூடிய நிலையில் நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிர் இழந்து விட்டார். இது தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுனை எதிர்த்து சில போராட்டக்காரர்கள் அவரது வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் அல்லு அர்ஜுனின் குழந்தைகளான அர்ஹா மற்றும் அயன் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஹைதராபாத்தில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறும் வீடியோ வெளியாகியுள்ளது.