பீகார் மாநிலத்தில் இளைஞர்களை குறி வைத்து ஒரு மோசடி நடந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வரும் நிலையில் அரசு இது தொடர்பாக பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது பீகார் மாநிலத்தில் அகில இந்திய கர்ப்பிணி வேலை சேவை என்ற நிறுவனத்தில் இருந்து இளைஞர்களுக்கு மெசேஜ் சென்றுள்ளது.

அதில் 799 ரூபாய் செலுத்தி பதிவு செய்தால் பெண்களின் புகைப்படங்கள் அனுப்பப்படும். அதில் பிடித்த பெண்களை தேர்ந்தெடுத்து கர்ப்பம் ஆக்குவது தான் வேலை. இதற்கு 13 லட்சம் ரூபாய் ஊதியம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மோசடி வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது போன்ற செய்தியை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.