கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 5,102 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு இருந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது இந்நிலையில் கர்நாடக தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் டிஜிட்டல் முறையில் லஞ்சம் கொடுக்கும் முறையை தொடங்கி வைத்திருக்கின்றனர்.
தேர்தல் நேரத்தில் மாநிலத்திற்குள் மொத்தமாக பணத்தை கொண்டு செல்வது கடினமான விஷயம். ஆனால் GPay, PhonePe மூலம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வது மிக எளிமையாக இருக்கிறது. வாக்காளர்களின் வங்கிக்கு நேரடியாக செல்லும் லஞ்சத்தினை தடுக்க முடியாமல் தேர்தல் ஆணையம் திணறி வருகிறது.
