உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் தரைப்பகுதியில் இருந்து 6000 அடி உயரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. இந்நகரில் பிரசித்தி பெற்ற ஜோதிர்மத் கோவில் உள்ளது. இங்கு கடந்த 15 நாட்களாக பல பகுதிகளில் உள்ள வீடுகள் குடியிருப்பு பகுதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் திடீர் திடீரென விரிசல் விட தொடங்கியுள்ளது. மேலும் தரைப்பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. அதேபோல் அந்த நகரின் மார்வாரி பகுதியில் குடியிருப்பு கட்டிடத்தில் மீது கோவில் ஒன்று சரிந்து விழுந்தது.

நிலப்பகுதியும் பூமிக்குள் மூழ்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அங்குள்ள மக்களை மீட்டு நகராட்சி கட்டிடங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் கர்ணபிரயாக் நகராட்சி பகுதியில் பகுகுணா நகரில் சில வீடுகளில் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது. இது குறித்து சிதார்கஞ்ச தொகுதி எம்.எல்.ஏ சவுர பகுகுணா கூறியதாவது, “ஜோஷிமத் நகருக்கு அருகே உள்ள கிராமங்களில் இது போன்ற நிலை காணப்படுகிறது என தெரிவித்துள்ளார். அதனால் மக்கள் என்னை தொடர்பு கொண்டு வருகின்றனர். மக்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம் என கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அதிக அளவில் விரிசல் ஏற்பட்ட மலாரிஇன், மவுண்ட் வியூ உள்ளிட்ட ஹோட்டல்கள் மற்றும் வீடுகளை இன்று இடிப்பதாக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த கட்டிட இடிப்பு பணியில் அரசு நிர்வாகத்திற்கு உதவுவதற்காக தேசிய பேரிடர் பொறுப்பு படையினரும் தயாராக இருக்கின்றனர். அதன்படி ஜோஷிமத் நகரில் மொத்தம் 678 கட்டிடங்களில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் 81 குடும்பங்கள் தற்காலிக புலம் பெயர்வு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் போர்வைகள் போன்ற நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.