திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சித்தூர் சாலையில் sbi வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு முன்பாக 3 ஏடிஎம் மெஷின்கள் உள்ளது. இந்த ஏடிஎம் மிஷின்களில் தொடர்ந்து பழுது ஏற்பட்டு வந்த நிலையில், வங்கியின் மேலாளர் ரகுநாத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் அங்கிருந்தார் கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்து பார்த்தார்இதனால் அவர் அங்கிருந்தார் கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்து பார்த்தார். அதாவது பணம் எடுக்கக்கூடிய இடத்தில் மர்ம நபர் ஒருவர் பேப்பரை திணித்து வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கிருஷ்ணமூர்த்தி (47) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பணம் எடுக்கும் இடத்தில் பேப்பரை வைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டை உள்நுழைத்து பின் நம்பரை போட்ட பின்  பணம் வரவில்லை என்று சென்று விடுவார்கள். பின்னர் அவர் பேப்பரை வெளியே எடுத்து விட்டு அந்த பணத்தை எடுத்து விட்டு சென்று விடுவார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே இவர் ஏடிஎம் கார்டில் பணம் எடுக்க தெரியாதவர்களுக்கு உதவுவது போன்று பணம் பறித்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.