கடந்த தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மேற்கு மண்டல திமுக பொறுப்பாளராக இருக்கும் அவர், கோவையை திமுகவின் கோட்டையாக மாற்றும் நோக்கில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.
கரூரையும் கோவையையும் தனது இரு கண்களாகக் கருதுவதாகக் கூறிய அவர், தனது சொந்த ஊரான கரூரின் ராமேஸ்வரப்பட்டியில் வாக்களிக்க வருவார் என்று அவரது ஆதரவாளர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இருப்பினும், தேர்தல் நாளன்று அவர் கரூருக்கு வந்து தனது வாக்கினைச் செலுத்தவில்லை.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதி மிகவும் பதற்றமான பகுதியாக இருந்ததால், காலையிலிருந்து மாலை வரை அங்குள்ள அனைத்து வாக்குச்சாவடிகளையும் நேரில் கண்காணித்து வந்ததாகத் தெரிவித்தார்.
தொகுதியின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் பணிகளைக் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் அங்கேயே முகாமிட்டிருந்ததால், கரூருக்குச் சென்று வாக்களிக்க முடியாமல் போனதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
