ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் “கருப்பு”. இந்தத் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி மதுரை அழகர்கோயில் கருப்பணசாமிக்கு 18 அடி உயர பிரம்மாண்ட அரிவாளை நேர்த்திக்கடனாகக் காணிக்கை செலுத்தியுள்ளார்.
படம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இந்த மெகா வெற்றிக்காக நேர்த்திக்கடன் செலுத்த ஆர்.ஜே.பாலாஜி நேராக மதுரைக்கு விரைந்தது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. 18 அடி உயர அரிவாளுடன் இயக்குனர் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகின்றன.
