மனிதர்களால் விரும்பப்படும் உயிரினங்களில் ஒன்றுதான் பறவைகள். பொதுவாக அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்து இருக்கும் என்பார்கள்.அதற்கு ஏற்றது போல தொட்டால் சில நொடிகளில் கொல்லும் இரண்டு வகையான பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அந்தப் பறவைகள் தங்கள் இறகுகளில் விஷத்தை மறைத்து வைத்திருப்பதாக தேனி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த விஷ பறவைகள்  ரீஜண்ட் விஸ்லர் (பச்சிசெபலா ஸ்லிகாகெல்லி) மற்றும் ரூஃபஸ்-நேப்ட் பெல்பேர்ட் (அலிட்ரியாஸ் ருஃபினுச்சா)  என்ற இனத்தை சேர்ந்தவை எனவும் தெரியவந்துள்ளது. இவை பெரும்பாலும் இந்தோ பசிபிக் பகுதிகளில் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.