தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி லயோலா மணி கொடுத்த ஒரு பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால் தான் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததாக அவரை அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் விமர்சிக்கிறார்கள். ஆனால் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர். 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவை உதறிவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார். அப்படிஇருக்கும்போது சினிமாவில் நீர்த்து போய் தான் அரசியலுக்கு வந்துள்ளார் என்று அவரை எப்படி சொல்லலாம் என லயோலா மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன்பிறகு திமுக கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசன் வயதான பிறகு சினிமாவில் வாய்ப்பு இழந்த பிறகு அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அவரைப் போன்று எங்கள் தலைவருக்கு வயதாகி விட்டதா.? இல்லை சினிமாவில் வாய்ப்புகள் தான் இல்லாமல் போனதா.? இப்போது கூட எங்கள் தலைவருக்கு கதை சொல்ல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் லைனில் நிற்கிறார்கள். அப்படி இருக்கும்போது என் தலைவர் சினிமாவில் நீர்த்து போய் அரசியலுக்கு வந்தார் என்று சொல்வதில் எந்த விதத்தில் சரி. மேலும் திமுக கூட்டணிக்குள் அவர்களே ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்று கூறினார்.