
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியினை தொடங்கினார். அவர் கட்சி தொடங்கிய நாளிலிருந்து போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்விதான். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.அதாவது திமுக கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசன் அவர்களுக்கு ஆதரவு மட்டும் கொடுத்துவிட்டு தேர்தலில் போட்டியிடவில்லை.
இதன் காரணமாக அந்த கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுகிறார்கள். அந்த வகையில் மநீம கட்சியின் சென்னை தென் கிழக்கு மாவட்ட செயலாளர் ஓம் பிரகாஷ் அந்த கட்சியில் இருந்து விலகியுள்ளார். இவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். மேலும் இவருக்கு 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதாக கூறப்படுகிறது.