கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் டைரக்டில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதனையடுத்து கமலின் 234 படத்தை இயக்குனர் மணிரத்னம் டைரக்டு செய்ய இருக்கிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் சிம்பு மணிரத்னம் திரைப்படத்தில் நடிக்க சிக்கல் வந்திருப்பதாக புதிய பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. காரணம் தேசிங்கு பெரியசாமி திரைப்படத்தில் நடிக்கும் சிம்பு தாடி வளர்க்க வேண்டிய நிலையில் உள்ளார். அதே நேரம் மணிரத்னம் படத்தின் கதாபாத்திரத்தில் சிம்பு தாடி உடன் இருக்கக்கூடாதாம். இதன் காரணமாக இந்த கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது