புதிதாக திருமணம் செய்த பெண் முதலிரவில் தனது கணவரின் குடும்பத்தினர் கன்னித்தன்மையை சோதித்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒரு வாலிபரை திருமணம் செய்து கொண்டார். அவர் முதலிரவு அறைக்குள் நுழைந்த பிறகு கணவரின் குடும்பத்தினர் இளம்பெண்ணின் கன்னி தன்மை குறித்து கொடூரமாக பரிசோதனை செய்துள்ளனர்.

இதனால் மன அழுத்தத்தில் இருந்த பெண்ணுக்கு 3 மாதங்களில் கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் ஒன்பது மாதங்களில் குழந்தை இறந்து பிரசவம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. கன்னித்தன்மையை பரிசோதனை செய்வது சட்டத்தால் தடை செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அந்த பெண்ணின் செயலுக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.