எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் வாக்கு வங்கி சரிந்துள்ளது என்றும் விமர்சித்து இருந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது நேற்று நாமக்கல் சென்ற முதல்வர் ஸ்டாலின் கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலையை திறந்து வைத்தார்.

அதன்பிறகு பொம்மை குட்டை மேடு பகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு 3 வருடங்களில் செயல்படுத்த திட்டங்கள் குறித்து நேரடியாக கள ஆய்வு நடத்த இருக்கிறேன்.

தற்போது தமிழ்நாட்டில் ஏராளமான தொழிற்சாலைகள் வரை இருக்கும் நிலையில் இன்னும் 5 வருடங்களுக்குப் பிறகு கண்டிப்பாக அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சியடையும் என்றார். அதன் பிறகு திமுகவின் வாக்கு வங்கி சரிந்துள்ளதாக கூறிய எடப்பாடி பழனிச்சாமி கனவு உலகத்தில் இருக்கிறார்.

திமுக தமிழ்நாட்டில் மதிப்புமிக்க ஆட்சியை வழங்கி வருகிறது. திமுக மீது எடப்பாடி பழனிசாமி கூறும் குற்றச்சாட்டுகளை மக்கள் நகைச்சுவையாக கடந்து செல்வார்கள் என்று கூறினார். மேலும் நேற்று நாமக்கல்லில் 810 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற மற்றும் புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.