
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு வீட்டின் மீது நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது இரவு நேரம் என்பதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாட்டி மற்றும் பேத்தி இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

அதன்பின் அருகில் உள்ளவர்கள் இந்த சம்பவத்தை பற்றி காவல்துறையினிடம் புகார் அளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாட்டி மற்றும் பேத்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.