தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைகளில் நீர் வரத்து அதிகமாகியுள்ளது. குறிப்பாக குரங்கணி, கொட்டக்குடி பகுதிகளில் பெய்த கன மழையினால் அணைபிள்ளையார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு உருவாகியுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் நேற்று 62.73 அடியாக இருந்த நிலையில் இன்று 63.62 அடியாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான அரசரடி, வெள்ளிமலை, வருசநாடு, கண்டமனூர் போன்ற பகுதிகளில் கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து ஆற்றை கடக்க பொதுமக்கள் முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.