அகமதாபாத் நகரில் மூன்று மாத குழந்தையை பெற்ற தாயே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 22 வயதான கரிஷ்மா பாகேல் என்பவர் மெகினிநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தை திடீரென காணாமல் போனதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்ததில் குடிநீர் தொட்டியில் இருந்து குழந்தையின் சடலம் மீட்க்கப்பட்டது. முதலில் இது சந்தேகத்திற்கு இடமான மரணம் என்று கூறப்பட்ட நிலையில் பின்னர் போலீசார் கரிஷ்மாவிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

அதாவது சம்பவ நாளில் கரிஷ்மா குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது குழந்தை விடாமல் அழுது கொண்டே இருந்தது. அவர் குழந்தையை சமாதானம் செய்வதற்காக எவ்வளவோ முயற்சி செய்தபோதிலும் குழந்தை சமாதானம் ஆகாதால் ஆத்திரத்தில் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து குழந்தையை கொலை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் கரிஷ்மாவை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.