தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்திலும்,  சூர்யா நடிக்கும்  ரெட்ரோ படத்திலும் நடித்து வருகிறார். ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி படத்திலும் நடித்து வருகிறார்.  அடுத்ததாக ராகவா லாரன்ஸின் காஞ்சனா 4 பாகத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. ஹிந்தியில் வருண் தவானுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டி ஒன்றில், “என்னை பற்றி ட்ரோல்கள் வரும்போது பல நேரங்களில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மீம் பக்கங்களில் என்னை தொடர்ந்து ட்ரோல் செய்த ஒரு காலம் இருந்தது . அவர்களின் ஏன் என்னைப் பற்றி தொடர்ந்து நெகட்டிவ்வான செய்தியை பரப்புகிறார்கள் என்று நான் யோசித்தேன்.

என்னை சரியாக டார்கெட் செய்து ட்ரோல் செய்ததாக  உணர்ந்தேன். மற்றவர்களை குறைத்து மதிப்பிட ஒரு கும்பல் நிறைய பணம் செலவழிக்கிறார்கள் என்று நான் புரிந்து கொண்டேன். என் பெற்றோரும் நானும் மிகவும் வருத்தப்பட்டோம். ஆனால் அதை நான் பெருமையாக எடுத்துக் கொண்டேன். ஏனென்றால் யாராவது உங்களை குறைத்து மதிப்பிட விரும்பினால் அவர்களை விட உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒன்று பிரச்சனை இல்லை என்று நான் என் பெற்றோரை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். என்னை ட்ரோல் செய்ய  லட்சக்கணக்கில் செலவிடுகிறார்கள் என்று கண்டுபிடித்தேன்” என்று  தெரிவித்துள்ளார்.