
சிவகங்கை மாவட்டம் ஆயுத படை பிரிவில் 30 வயதுடைய இளம்பெண் ஒருவர் காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம்பெண்ணுக்கு திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.