உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணிற்கும் அந்த கிராமத்திற்கு அடிக்கடி வந்து செல்லும் புடவைகளுக்கு ஜரிகை தயாரிக்கும் தொழிலாளியான இக்பால் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனிடையே இக்பால் தனிமையில் இருந்ததை காணொளியாக பதிவு செய்து அந்த பெண்ணை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இக்பால் தனது வீட்டிற்கு அருகே கொலை செய்யப்பட்டு சடலாக கிடந்தார். இதனால் போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அடிக்கடி தன்னை மிரட்டிய இக்பாலை கொலை செய்ய பெண் திட்டமிட்டார். சம்பவத்தன்று கணவருக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து தூங்க வைத்துவிட்டு அந்த பெண் இக்பாலின் வீட்டிற்கு சென்றார். அங்கு வைத்து அவருடன் உடலுறவில் ஈடுபட்ட போது கத்தியால் குத்தியும் கழுத்தை நெரித்தும், இக்பாலை கொலை செய்தது தெரியவந்தது.
