அசாம் மாநிலத்தில் உள்ள கௌ்காத்தி பகுதியில் பிகாஷ் பர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தீபாவளி ராஜ்போன்சி என்ற மனைவியும், மிரோனி பர்மன் என்ற 10 வயது மகனும் இருக்கிறார்கள். இதில் தீபாலி மற்றும் பிகாஷ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தீபாலி கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கிடையில் தீபாலிக்கு ஜோதிமொய் ஹலோய் என்பருடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில் தீபாலி தங்கள் கள்ள காதலுக்கு மகன் இடையூறாக இருப்பதாக எண்ணினார்.

இதனால் அவர் தன்மகனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்ட நிலையில் அதன்படி கடந்த சனிக்கிழமை இருவரும் சேர்ந்து சிறுவனை கொடூரமாக கொன்றனர். அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவர் மறுநாள் குப்பை சேகரிப்பதற்காக சென்றபோது அங்கு ஒரு சூட்கேஸ் கிடைப்பதை பார்த்தார்.

அந்த நபர் அதனை திறந்து பார்த்தபோது ஒரு சிறுவனின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சிறுவனின் தாயாரையும் அவரது கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்யவே மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.